செவ்வாய், 1 நவம்பர், 2016

சுயபரிசோதனை

மளிகை கடைக்கு வந்த அந்தச் சிறுவன், கடை வாசலில் இருந்த பொதுத் தொலைபேசியில் பேச முயன்றான். தொலைபேசிஅவனது உயரத்துக்கு எட்டவில்லை. ஒரு அட்டைப்பெட்டியைப் போட்டு, அதில் ஏறி நின்று, நம்ப்ரை டயல் செய்து பேசினான்.

கடையில் கூட்டமில்லாத நேரம் என்பதால் கடைக்காரரின் கவனத்தை அவன் எளிதாகக் கவர்ந்தான். இவ்வளவு சிரமப்பட்டு, பையன் யாரிடம் பேசுகிறான் என்று கடைக்காரர் ஒட்டுக் கேட்டார். மேடம், உங்கள் பங்களாதோட்டத்தில் புல்தரையைச் செதுக்கும் வேலையை எனக்குத் தருவீர்களா ?

நான் பணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்றான் பையன். அதற்கு ஏற்கனவே ஆள் இருக்கிறதே என்றாள் எதிர்முனையிலிருந்த பெண்மணி. என்னை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள் மேடம். அவர் வாங்குகிற கூலியில் எனக்கு பாதியைக் கொடுத்தால் போதும் என்றான் பையன். வேண்டாம்பா... இப்போது இருப்பவரே நன்றாகத்தான் வேலை பார்க்கிறார்.


மேடம், எனக்கு வேலை கொடுத்தால் புல்தரையைச் செதுக்குவதோடு, நடைபாதை ஓரங்களையும் அழகுபடுத்தி, உங்கள் பங்களாவின் தோற்றத்தையே மாற்றிவிடுவேன். ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.

ஸாரி, இப்போது எங்கள் வீட்டில் அதைச் செய்கிற பையனைப்பற்றி உனக்குத் தெரியாது... அவ்வளவு திறமைசாலி. அவனை மாற்ற முடியாது. போனை வைத்து விடு... மறுமுனையில் போன் வைக்கப்பட்டதும், சிறுவன் மாறாத புன்னைகையோடு போனை வைத்தான்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரர் நெகின்ழ்துவிட்டார். வாய்ப்பு கிடைக்காதபோதும் இவன் தன்னம்பிக்கையோடு சிரிக்கிறானே. இவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவர் - தம்பி, நான் உனக்கு வேலை தருகிறேன் என்றார்.

சிறுவன் சிரித்தபடி, வேண்டாம். ஏற்கனவே எனக்கு வேலை இருக்கிறது என்றான். ஆனால் சற்று முன்னர் ஒரு வேலைக்காக போனில் கெஞ்சினாயே. இல்லை சார், என்னுடைய வேலையை நான் எப்படிச் செய்கிறேன் என்று பரிசோதிக்கவே போன் செய்தேன். நான் குரல் மாற்றிப் பேசிக்கொண்டிருந்தது என் முதலாளியம்மாவிடம்தான். அவர்கள் மாற்றமுடியாது என்று சொன்ன பழைய வேலைக்காரன் நான் தான்... - தமிழ் சிறுகதைகள்[சுயபரிசோதனை ] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !