வெள்ளி, 4 நவம்பர், 2016

உஷார்!உஷார்!!உஷார்!!!


உஷார்!உஷார்!!உஷார்!!!
💥💥💥💥💥💥💥💥
👇அவசியம் படிக்கவும்
திருமலை ஏழமலையான் கோவிலில் பக்தருக்கு நேர்ந்த கதி?உஷார் நண்பர்களே 👀 👀👂👂
சென்ற வாரம் ஒரு நபர் திருப்பதி திருமலைக்கு ஏழமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்தவுடன் முகம் தெரியாத ஒரு நபர் பதட்டத்துடன் சாமி தரிசனம் செய்தவரை அணுகி
"என்னுடைய மணிபர்ஸ்ஸை யாரோ திருடிட்டாங்க,ஊருக்கு செல்வதற்க்கு பணம் இல்லை,எனது வீட்டிற்க்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்,அவங்க என்னுடைய அக்கவுன்ட்ல பணம் போட்டுடுவாங்க,உங்க போனை கொஞ்சம் கொடுங்க"என்றான் பரிதாபமாக.
சாமிதரிசனம் செய்தவரும் தனது செல்போனை அந்த நபருக்கு கொடுத்து உதவியுள்ளார்.
செல்போனை வாங்கிய நபர் செல்போன் பேசியபடியே திடீரென மறைந்து விட்டான்.
சாமிதரிசனம் செய்தவரும் அவனை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே செல்போனை திருடி சென்ற நபர் எப்படியோ சாமிதரிசனம் செய்த நபரின் மனைவிக்கு போன் செய்து
"உங்கள் கணவர் திருப்பதியில் வாகன விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் ஆபத்தாக சிகிச்சை பெற்று வருகிறார்,மருத்துவ செலவிற்க்கு அவசரமாக ரூ.40ஆயிரத்தை ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும்,உடனே நான் கூறும் பேங்க் அக்கவுன்டிற்க்கு பணத்தினை செலுத்துங்கள் அவசரம் "என்று கூறியுள்ளான்.
பிறகு செல்போனை திருடிய நபர் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கேஷியரிடம் பில் கொடுக்கும் போது
"தனது பர்ஸ்ஸை காணவில்லை"எனவும் அதில் தனது பணம் மற்றும் ஏடிம் கார்டு இருந்தது எனவும் கூறியுள்ளான்.

பரிதாபத்துடன் ஓட்டல் மேனேஜரிடம் "உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பரை தாருங்கள்,எனது வீட்டிற்க்கு போன் செய்து பணம் போடச் சொல்கிறேன்"என்று நைசாக பேசி நெம்பரை வாங்கி அதனை சாமிதரிசனம் செய்து செல்போனை இழந்த நபரின் மனைவிக்கு தந்து அவரும் அந்த பேங்க் அக்கவுன்டிற்க்கு ரூ40ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
பணம் செலுத்திய விவரத்தினை திருட்டு பயலுக்கு சொல்லியுள்ளார் மனைவி.
இதனை அறிந்த திருடன் ஓட்டல் மேனேஜரிடம் சென்று பணம் போடப்பட்ட விவரத்தினை கூறி அவர் மூலமாகவே ATM மூலம் பணத்தினை எடுத்து சாப்பிட்ட தொகைக்கு பணம் கொடுத்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு கம்பி நீட்டியுள்ளான்.
இதனிடையே சாமி தரிசனம் செய்த நபர் ஊருக்கு புறப்பட்டுவிட்டார்.
அவரது மனைவியோ தனது உறவினர்களுடன் பதட்டத்துடன் திருலைக்கு வந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்துள்ளார்.
அவரது கணவர் பெயரில் யாரும் மருத்துவமனையில் இல்லை என்றவுடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த விவரத்தினை போலிஸிடம் கூறியுள்ளனர்.
போலிஸாரும்  ஓட்டல் மேனேஜரை விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்துள்ளனர். போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செல்போனை தந்து உதவி, பணத்தினை இழந்து, பதட்டமாகி,மன உளச்சல் ஆகி நிம்மதி இழந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.
எப்படி எல்லாம் ஏமாத்தராங்க பாருங்க.உஷார் நண்பர்களே.😳😳😳
நன்றி:தி இந்து நாளிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !