புதன், 2 நவம்பர், 2016

அன்பா..? செல்வமா ..? வெற்றியா ..?

ஒரு ஊரில் குமரன் என்பவன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து உள்ளே வரலாமா...?  என்று கேட்டனர்.

தந்தை வாருங்கள் என்றார்.

நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்… இவர் பெயர் வெற்றி… இவர் பெயர் அன்பு... எங்கள் மூவரில் ஒருவர் தான் வீட்டிற்குள் செல்லமுடியும்… எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார் பணம் எனப்படுபவர்.


குமரனின் தந்தை வெற்றியை அழைக்கலாம்... நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம் என்றார்.

ஆனால் குமரனோ… அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்… நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்… எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம் என்றான்.

ஆனால் குமரனின் தாயோ.. வேண்டாம்… அன்பையே அழைக்கலாம். அன்பு தான் முக்கியம் என்றாள்.

பின் மூவரும், அன்பு உள்ளே வரட்டும்... என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடனே குமரனின் அம்மா அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம் என்றார்.

அன்பு சொன்னார், நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்... மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்... ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்.

அன்பு உள்ளம் இருந்தால்... நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே முக்கியம் … அன்பே முக்கியம்... - தமிழ் சிறுகதைகள்[ அன்பா..? செல்வமா  ..? வெற்றியா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !