ஞாயிறு, 30 அக்டோபர், 2016

நீங்க நல்லா தூங்குறீங்களா?

நீங்க நல்லா தூங்குறீங்களா?

வளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது.


முதியவர்கள்:

இவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

பாதிப்புகள்:

முறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும்". அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு".

அறிகுறிகளும் தீர்வும்:

குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள். தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.

தூக்கமின்மையைப் போக்க:

1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.

2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.

3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும்.

4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும்.

5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பயமுறுத்தும் புள்ளிவிவரம்

நாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
நன்றி தி இந்து (ஆங்கிலம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !