புதன், 26 அக்டோபர், 2016

சொல் பேச்சு கேள்!

சொல் பேச்சு கேள்!🍁 சேகர் ஒரு சோம்பேறி பையன், அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று நினைத்து, அவனுடைய அப்பா, அந்த ஊரில் இருந்த ஒரு முனிவரிடம் சென்று, தன் மகன் மிகவும் சோம்பேறியாக இருக்கிறான். நான் என்ன சொன்னாலும் அவன் சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள மறுக்கிறான். நீங்கள் தான் அவனைத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

🍁 முனிவர் சேகரை தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார். மறுநாள் முனிவரிடம் சேகரை அழைத்துச் சென்றார். இருவரும் முனிவரை சந்தித்தனர். முனிவர் சேகரை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்க இருந்த ஒரு சிறிய செடியை பிடுங்கச் சொன்னார். சொன்னவுடனே ரொம்ப சுலபமாக பிடுங்கி விட்டான்.


🍁 அப்புறம் கொஞ்சம் பெரிய செடியைப் பிடுங்க சொன்னார். அவன் கொஞ்சம் முயற்சி செய்து பிடுங்கினான். அடுத்து இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததைக் காட்டி, அதை பிடுங்க சொன்னார். அதை மிகவும் கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதற்குள் அவன் மிகவும் களைத்து போனான்.

🍁 மறுபடியும் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனால் அவனால் முடியவில்லை. என்னால் முடியாது என்று முனிவரிடம் கூறினான்.

🍁 முனிவர் சேகரிடம், இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கும்போதே உன்னிடம் இருக்கும் சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அது சுலபமாக போய்விடும். நீ பெரியவனானப் பிறகு அது உன்னிடம் இருந்து விலகுவது மிகவும் கஷ்டம். உங்க அப்பா சொல் பேச்சைக் கேட்டு நடந்தால், நீ வாழ்க்கையில் பெரிய மனிதனாக வருவாய் என்று கூறினார்.

🍁 அதைக் கேட்ட சேகரும், அன்று முதல் அப்பாவின் சொல்பேச்சைக் கேட்டு நடந்து வாழ்கையில் பெரிய மனிதனாக, மதிப்புமிக்கவனாக வளர்ந்தான்.
இதுபோன்ற மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகளுடன் இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !